தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-வது முறையாக வேட்பு மனு தாக்கல்: மேட்டூரில் போட்டியிட மனு

மேட்டூர்: தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக, மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார்.

Source link