சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன்

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை நான்குமுனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள், தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்து வேட்பாளர்களையும் முக்கிய அரசியல் கட்சிகள் அறிவித்து விட்டு பிரசாரக்களத்தில் குதித்து உள்ளன.

இந் நிலையில் தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்துவிட்ட நிலையில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்துவிட்டார்.

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதே நேரத்தில் முந்தைய தேர்தலில் போட்டியிட்ட போது தரப்பட்ட குக்கர் சின்னத்தையே மீண்டும் தருமாறு தேர்தல் கமிஷனிடம் அக்கட்சி சார்பில் மீண்டும் கேட்கப்பட்டு இருந்தது.

அவர்கள் கேட்டபடியே, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் மீண்டும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிட உள்ள 11 தொகுதிகளிலும் அமமுக குக்கர் சின்னத்தில் களம் இறங்குகிறது.

Source link