விவசாயி மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட 10 கோடி; ஏழ்மையிலும் உள்ள நேர்மை

உத்திர பிரதேசம் மாநிலம் மெய்ன்புரி மாவட்டம் தீவகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் பராஸ்பன் பகிலியா. இவர் விவசாய தொழில் பார்த்து வருகிறார். இவரது மைனவி ரீட்டா. இவர், பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் அஷ்டமி தினத்தன்று விடுமுறை என்பதால், தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணத்தின் மதிப்பைக் கண்டு அதிர்ந்து போனார்.  

அவரது வங்கிக்கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சத்து 49,588 இருந்தது. இதனைக் கண்டு, அதிர்ந்துபோன ரீட்டா அந்த தொகையை அப்படியே போனில் படம்பிடித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ மிக வேகமாக வைரலானது. ரீட்டா தனது குடும்பத்தாரிடம் இந்த பணத்தை எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதையறிந்த பலரும் ரீட்டாவின் நேர்மையைப் பாராட்டி வருகின்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த க்ரீம்கஞ் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் ரிஷிகாந்த் கூறுகையில், “பணப்பரிமாற்றம் செய்யும் சமயத்திலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ரீட்டாவின் வங்கிக்கணக்கில் தவறுதலாக இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், விடுமுறை முடிந்து வங்கி திறந்தவுடன், இந்த தவறு சரி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.  

Source link