சென்னை: பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு தவெக புகார் அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர் பிரசாரத்தை துவக்கினார். இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், தவெகவின் நிர்மல் குமார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், பெரம்பூரில் தவெக பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லை. போக்குவரத்தை போலீசார் சரி செய்து கொடுக்கவில்லை. போதிய போலீஸ் பாதுகாப்பு அளிப்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் சமமான பிரசார முறையை இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
