நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 07) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 07) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* இரண்டு நாட்கள் பயணமாக இன்று பிரதமர் மோடி மலேசியா செல்கிறார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். செமிகண்டக்டர், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

* விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

* இந்தியா- இலங்கை இணைந்து நடத்தும் 20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐசிசி ஆடவர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

* அதேபோல் கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

* வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் வருமா என வணிகர்கள் எதிர்ப்பார்ப்பு. காரணம் நாளையும் இன்றைய விலையில் தான் நாளையும் தங்கம், வெள்ளி விற்கப்படும்.

Source link