சீமான் சொத்து மதிப்பு ரூ.39 லட்சம்: ரூ.5 லட்சம் கடன்

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கு ரூ.39 லட்சம் சொத்து உள்ளதாகவும், ரூ.5 லட்சம் கடன் உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் மற்றும் மனைவி கயல்விழியின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.

இதன்படி

கையிருப்பு

சீமானிடம் ரூ.50 ஆயிரம் கையிருப்பில் உள்ளது.

மனைவி பெயரில் ரூ.35 ஆயிரம் கையிருப்பு உள்ளது.

சீமானின் அசையும் சொத்து மதிப்பு ரூ.39 லட்சம்.

மனைவியிடம் இருக்கும் நகை உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.2.57 கோடி.

வருமான வரி

சீமான் கடந்த 2020 -2021ம் நிதியாண்டில் ரூ.5.12 வருமான வரி செலுத்தியுள்ளார்.

2021 – 2022 ல் ரூ.4.9 லட்சம்

2022- 2023 ல் ரூ.4.9 லட்சம்

2023- 2024 ல் ரூ.3.1 லட்சம்

2024 – 2025 ல் ரூ.6.6 லட்சம் வரி செலுத்தி உள்ளார்.

வழக்கு

சீமான் மீது அரசுக்கு எதிராக பேசுதல், சட்ட விரோத கூட்டம், பல்வேறு இனங்களுக்கு இடையே பகைமூட்டுதல், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வங்கிக்கணக்கள்

சீமான் ரங்கராஜபுரம் இந்தியன் வங்கி, விருகம்பாக்கம் ஆக்சிஸ் வங்கி,, அண்ணா நகர் எஸ்பிஐ வங்கியில் கணக்கு துவங்கி உள்ளார். அவற்றில் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் உள்ளது.

மனைவி பெயரில் மதுரை எஸ்எஸ் காலனி எஸ்பிஐ வங்கியிலும், அண்ணாநகர் எஸ்பிஐ வங்கியிலும் கணக்கு உள்ளது. மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 180 ரூபாய் உள்ளது.

வாகனங்கள்

சீமானிடம் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் வெர்னா மாடல் கார் உள்ளது.மனைவியிடம் டொயோட்டா இன்னோவா, ஹூண்டாய் சீடா கார் உள்ளது

தங்கம் இருப்பு

சீமானிடம் ரூ.19.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் உள்ளது.

அசையா சொத்து

சீமான் பெயரில் அசையாச் சொத்து இல்லை.

மனைவி பெயரில் விவசாய நிலம், விவசாயம் அல்லாத நிலங்கள் உள்ளன.

கடன்

சீமானுக்கு எஸ்பிஐ வங்கியில் 5 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

மனைவி 18 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

கல்வித்தகுதி

சீமான் இளையான்குடி ஜாகிர் உசைன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்

Source link