இயக்குநர் சுந்தர் சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதாவது அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக களம் காண்கிறார். இதுவரை அரசியலில் பெரிதாக தலை காட்டாமல் இருந்த சுந்தர் சி கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக்கட்ட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இருவரும் ஏற்கனவே சினிமாவில் ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின்றனர். அதாவது ஏசி சண்முகம் தனது பென்ஸ் மீடியா மூலம் சுந்தர் சி இயக்கிய அரண்மனை , காஃபி வித் காதல், அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.
சினிமாவில் பயணித்த இந்தக் கூட்டணி அரசியலிலும் பயணிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஏசி சண்முகம் புதிய நீதிக்கட்சி என அரசியலில் தொடர்ந்து இயக்கி வரும் நிலையில் அதில் சுந்தர் சி இணைவார் அதிலும் வரும் சட்டப்பேரவையில் போட்டியிடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் தனது திடீர் அரசியல் எண்ட்ரி குறித்து சுந்தர் சி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இதுவரை இல்லாத சுந்தர் சி, தற்போது புதிதாக எக்ஸ் தளத்தில் தனக்கான அக்கவுண்டை ஓபன் செய்துள்ளார். அதில் முதல் வீடியோவாக வெளியிட்ட அவர், “இதுவரை சினிமாவில் இயக்குநராக தயாரிப்பாளராக நடிகராக நிறைய படங்கள் மூலம் உங்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறேன். இப்போது புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன். முதன் முதலாக அரசியலில் நுழைந்திருக்கேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கியிருக்கேன். இதுவரைக்கும் சினிமாவில் மிகப்பெரிய ஆதரவும் வாழ்க்கையும் அளித்த நீங்கள் என்னுடைய புது முயற்சிக்கும் ஆதரவளித்து என்னை வெற்றியடைய செய்வீர்கள் என்று மனமார நம்புகிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி 🙏🏼 pic.twitter.com/hfFrzjAoyT
— Sundar C (@SundarCOffl) March 30, 2026
