தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அவரின் சொத்து மதிப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்தும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை எனவும் முதல்வர் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
