சென்னை; நாளையோ அல்லது நாளை மறுநாளோ வேட்பாளர்களை அறிவிப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

சென்னை; நாளையோ அல்லது நாளை மறுநாளோ வேட்பாளர்களை அறிவிப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி; ராகுல் கேரளா சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இன்று நடைபெற இருந்த எங்களின் மத்திய தேர்தல் குழு இன்னமும் கூடவில்லை. நாளையோ நாளை மறுநாளோ கூடி வேட்பாளர்களை அறிவிப்போம். அதற்காக இன்றிரவு அல்லது நாளை காலை நான் டில்லி செல்வேன். பத்நாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். எனவே, தொகுதி மாற்றம் இல்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கை வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் அறிக்கை. முதல்வரின் உழைப்பும், அவரின் அரவணைப்பும், மக்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையும் இந்த தேர்தலில் பேசப்போகிறது. அவரின் பணிகள், அவரின் சமூகநலன் திட்டங்கள் எந்த தரப்பையும் விடாமல் அனைத்தையும் அவர் கவர்ந்திருக்கிறார். எல்லா மக்களின் அன்பையும் பெற்றிருக்கிறார்.30 ஆண்டுகளுக்கு முன்னர், 1996ம் ஆண்டு ஒரு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் பெற்ற வெற்றியை போல், 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாகிறது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

Source link