விருதுநகர் : அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்,

விருதுநகர் : அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், மக்கள் நல பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் குடும்ப நிவாரண நிதி உள்ளிட்ட வாக்குறுதிகள் 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன. இவற்றை நிறைவேற்றாத தி.மு.க., தற்போதைய தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதிகளை வெளியிடாதது ஏன் என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முந்தைய வாரம் வரை வருவாய்த்துறையினர் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் கோரியும், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிப்.,இல் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்.

இது தொடர்பான அறிவிப்புகள் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊதியக்குழு அமைத்தல் போன்ற வாக்குறுதிகளே அளிக்கப்பட்டன.2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும், மக்கள் நல பணியாளர்கள் உயிரிழந்தால் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதோடு, குடும்ப நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இவை நிறைவேற்றப்படவில்லை. இவை எதுவும் தற்போதைய தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை.அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணை தலைவர் கண்ணன் கூறியதாவது: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் என்று கூறுவது நியாயமல்ல. 2021ல் நிறைவேற்றாத பல வாக்குறுதிகளை தி.மு.க., மீண்டும் அறிவிக்கவில்லை. கடந்து செல்லும் வகையில் தான் இந்த தேர்தல் அறிக்கை உள்ளது. எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே தீர்வு என்றார்.

Source link