பத்தனம்திட்டா: ”கேரளாவில் ஆளும் இடதுசாரிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது,” என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
கேரள சட்டசபையின், 140 தொகுதிகளுக்கு, வரும் ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அடூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:
என் மீது, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 55 மணி நேரத்திற்கு மேல் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தின. ஆனால், சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதோ அல்லது ஆளுங்கட்சி தலைவர்கள் மீதோ அப்படி விசாரணை நடக்கவில்லை. சமீபத்தில் கேரளாவுக்கு வந்த பிரதமர் மோடி கூட, சபரிமலை விவகாரத்தில் வாயே திறக்கவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கு, இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
