இ ந்திய பங்கு சந்தைகளுக்கு, கடந்த 10 ஆண்டுகளில், நடப்பு நிதியாண்டே வருவாய் அடிப்படையில் மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா பாதித்த 2019 – 20ம் நிதியாண்டை கருத்தில் கொள்ளாதபட்சத்தில், இதுவே நிலவரம் ஆகும். நடப்பு நிதியாண்டில் நிப்டி 50 குறியீடு 5.10 சதவீதம் சரிவு கண்டுள்ளது. எனினும், கடந்த 22 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு சந்தை சரிவில் முடிந்ததில்லை என்ற வரலாறு, முதலீட்டாளர்களுக்கு சற்று நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
