நகை அல்லது பணத்தைத் தொடாமல் இவற்றை மட்டும் திருடுவது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அந்த மர்ம நபர் உள்ளாடைகளைத் திருடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ச்சியாக நடைபெறும் இந்தச் சம்பவத்தால், இது ஏதேனும் ஒரு ‘சைக்கோ’ நபரின் வேலையாக இருக்கலாம் என்று பெண்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் வெளியே வரவும் அவர்கள் தயங்குகின்றனர்.
கங்காவதி நகர போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
