சென்னை : தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

சென்னை : தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில், மொத்தம் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில், ஆண்டுதோறும் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் மட்டும் இன்று நள்ளிரவு முதல், கட்டணம் உயர்கிறது. குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.

சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், சுங்க கட்டண உயர்வை தள்ளி வைக்க வேண்டும் என, சரக்கு வாகன உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் வாயிலாக வலியுறுத்தப்பட்டு உள்ளது. இத்தகவல், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வாயிலாக, டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, முடிவு நிலுவையில் உள்ளது.

Source link