25 மாநகராட்சிகள் 1,000 டெண்டர்கள்: உடைந்தது சிண்டிகேட் டீலிங்- ரூ.100 கோடி வரை அள்ளும் ஒப்பந்ததாரர்கள் – tamil nadu govt maws tenders competitive bidding with 30pc savings to exchequer

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை மூலம் வெளியிடப்படும் டெண்டர்களுக்கு ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களை காட்டிலும் பலர் ஆர்வத்துடன் ஒப்பந்தத்தை பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதில் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமின்றி, மாநில அரசுக்கு லாபம் கிடைக்கிறது.

தவெக ஆட்சி அமைந்ததும் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர்கள் பெறுவதில் இருந்த முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வந்து, திறமையான மற்றும் அனுபவமுள்ள ஒப்பந்ததாரர்கள் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். இதை நிரூபிக்கும் வகையில் தற்போது சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை வெளியிடும் டெண்டர்கள்

அதன்படி, 25 மாநகராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய போட்டியால் அரசின் கருவூலத்தில் 30 சதவீதம் வரை சேமிக்க முடிகிறது என்கின்றனர் அரசு அதிகாரிகள். உதாரணமாக வேலூர், சேலம், திருச்சி, கரூர், மதுரை, நாகப்பட்டினம் போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகளை எடுத்துக் கொள்வோம். இவற்றில் சாலை போடுதல், கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் வழங்கல் போன்ற பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது.

TVK அரசின் புது சாதனை!ஒரே TENDER க்கு 9 பேர் போட்டி! யாரும் செய்யாததை செய்யும் CM

ரூ.100 கோடி வரை டெண்டர் பெறும் ஒப்பந்ததாரர்கள்

அரசு நிர்ணயம் செய்த தொகையை காட்டிலும் குறைவான தொகைக்கு பலர் டெண்டர் கோரி, அதை வெற்றிகரமாக பெற்றுள்ளனர். இதில் 50 லட்சம் முதல் 100 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்கள் அடங்கும். கடந்த காலங்களில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் அதிக தொகை கோருதல், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் டெண்டர் வழங்குதல் போன்றவை நிகழ்ந்துள்ளன. இதுதொடர்பாக விமர்சனங்களும், புகார்களும் முன்வைக்கப்பட்டாலும், ஆளுங்கட்சியை எதிர்த்து ஒப்பந்த நிறுவனங்களால் எதுவும் செய்ய இயலாது. தற்போது அந்த நடைமுறையை மாற்றி எழுதியிருக்கிறது தவெக அரசு.

சிண்டிகேட் டீலிங் – முதல்வர் விஜய் வச்ச செக்

குறிப்பாக சிண்டிகேட் என்ற முறை மூலம் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு, அவர்களே மாறி மாறி டெண்டர் பெற்று வந்துள்ளனர். இதற்கும் தற்போதைய முதலமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒவ்வொரு டெண்டரிலும் ஏராளமான ஒப்பந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவர்களில் அனுபவமுள்ள மற்றும் நற்பெயர் நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைக்க வழி ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வாய்ப்புகள் பரவலாக செல்வது ஆரோக்கியமான போக்காக கருதப்படுகிறது.

தவெக அரசு மீது ஒப்பந்ததாரர்கள் நம்பிக்கை

தமிழக அரசின் மீது புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாக கூறுகின்றனர். இதில் சில வழிகாட்டுதல்களும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் பெற்ற பின்னர், திட்ட செலவில் உயர்வு ஏற்பட்டால் அதுபற்றி உயர் அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை சமர்பித்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட சுற்றறிக்கையை பார்க்கலாம். டெண்டர் கோரும் போது திட்ட செலவு 2 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக ஒவ்வொரு திட்டத்திற்கும் துல்லியமான பட்ஜெட் மதிப்பிடும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை ஆண்டுதோறும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர்களை வெளியிடுகிறது. இதில் 30 சதவீதம் சேமிப்பு என்று வைத்துக் கொண்டால் அரசு கருவூலத்தில் 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Source link