சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” வரும் 2026 செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி வழங்கப்படவுள்ள விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறுபவர்கள் விவரம்:
அண்ணாமலை புது கட்சி- இவ்ளோ விஷயம் இருக்கா?
பெரியார் விருது: விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
அண்ணா விருது: சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் திரு. சேலம் ஜி.கே. சுபாஷ்
கலைஞர் விருது: கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவருமான திரு. திருச்சி சிவா, எம்.பி.
பாவேந்தர் விருது: கழக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி என்.வி.என். சோமு
பேராசிரியர் விருது: தலைமைக் செயற்குழு உறுப்பினர் திரு. மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது: இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. நா. இளையராஜா
இத்தகவலை தி.மு.க. தலைமைக் கழகம் 01-09-2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
