பிரதமர் வேட்பாளர் யார்? தவெக எம்எல்ஏ பேச்சுக்கு காங்கிரஸில் இருந்து வந்த ரியாக்‌ஷன் – congress mla tharahai cuthbert has said that the tvk mlas are still in a fan mindset

தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், 2029-ல் சிஎம் விஜய்தான் பிரதமராக வருவார் என பேசியுள்ளார். அவருடைய இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தாரகை கத்பர்ட் பதில் ஒன்றை அளித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் குறித்தான விவாதம் தவெக, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் இடையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. தவெகவினர் தொடர்ச்சியாக முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎம் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக எம்எல்ஏ கனிமொழி பேசியுள்ளதற்கு, காங்கிரஸ் கட்சியை சார்ந்த தாரகை கத்பர்ட் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

Source link