ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என சிபிஐ தரப்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், அடுத்த விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Source link
