தள்ளுவண்டியில் காலி குடங்களுடன் பேரணி – நா.த.க. வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நேற்று (30.03.2026) முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர் கவிதா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆசிரியருமான கவிதா சங்கரன்கோவில் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள முப்படாதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு திருவேங்கடம் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சி தொண்டர்களுடன் பேரணியாகச் சென்றபோது குடிநீர் பிரச்சனைகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டும் விதமாக வேட்பாளரைத் தள்ளு வண்டியில் அதன் வண்டியில் ஏழு காலி குடங்களுடன் சிறு சிறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிச் சென்றனர். 

இரண்டடுக்கு பாதுகாப்பு அமைத்த போலீசார் பின்பு முறையான பரிசோதனைக்குப் பின்னர் கவிதா மற்றும் அவரது கணவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 4 பேர்களை மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளார்கள். கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தேர்தல் அதிகாரி அனிதாவிடம் வேட்பு மனு அளித்தனர். மேலும் சுயேச்சையாகத் தமிழக மக்கள் நலக் கட்சி சார்பில் முன்னாள் ராணுவ வீரர் ரவி வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

Source link