என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு: பிக் பாஸ் வெளியிட்ட வீடியோவில் பிரதீப் ஆண்டனி, தலைவனை காணோமே

பிக் பாஸ் 10: பிக் பாஸ் 10 நிகழ்ச்சி துவங்க இன்னும் நான்கு நாட்களே இருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக் பாஸ் கிராண்டு லான்ச்சை பார்ப்பதை தவிர வேறு பிளான் எதுவும் இல்லை என ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல பிக் பாஸை துவங்கி 10 ஆண்டுகளானதற்கு வாழ்த்து தெரிவித்தும் தொடர்ந்து வீடியோக்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக முதலாவது சீசனில் இருந்து 9வது சீசன் வரை நடந்த ஜாலியான விஷயங்களை தொகுத்து வீடியோவை வெளியிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்கள். முதல் சீசனில் விண்வெளி நாயகன் கமல் ஹாசனிடம் என்ன பண்றது சார், எல்லாமே சிரிப்பாக இருக்கு என ஓவியா சொல்வதுடன் வீடியோ துவங்கியிருக்கிறது.

ஹீரோ சார்: ஆண்டவரே நீங்கள் திரும்பி வரப்படாதா என கேட்கிறார்கள் ரசிகர்கள். செல்ஃபி புள்ளனு மும்தாஜ் சொல்ல உம்மானு சென்ராயன் கொடுத்த ரியாக்ஷனை பார்த்தவர்களோ இது எல்லாம் மறந்தே போச்சேப்பா என்கிறார்கள். தற்போது கோலிவுட்டில் பிசியாகிவிட்ட கவின் பெண் உடையில் காமெடி செய்வதை பார்க்கும்போது உங்களுக்கு இருந்தாலும் ரொம்ப தைரியம் தானுங்க என சொல்ல வைக்கிறார்.

நயன்தாரா ஜோடியாக நடிப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை என்ற கவினின் ஹாய் படம்ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கவினை பார்த்தவர்களோ லாஸ்லியா காதல் டிராக் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் கல்யாணம் நடக்கும் என்று எதிர்பார்த்தால் பிரேக்கப் ஆகிடுச்சே என்கிறார்கள். கவினுக்கு தன் மனதிற்கு பிடித்த பெண்ணுடன் திருமணமாகி அண்மையில் தான் இரட்டை பிள்ளைகள் பிறந்தார்கள். அவர் தன் கெரியர், குடும்பம் என சந்தோஷமாக இருக்கிறார்.

ரெட் கார்டு பிரதீப்: பாலாஜி முருகதாஸ், ஆரியின் காமெடியை பார்த்தால் அது வேறு ஜென்மத்தில் நடந்தது மாதிரி ஃபீல் ஆகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள். 7வது சீசனில் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் ஆண்டனியை பார்த்தவர்களோ, அவரை இந்த வீடியோவில் எதிர்பார்க்கவில்லை பிக் பாஸ் என்கிறார்கள்.

நேற்று தான் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார் பிரதீப் ஆண்டனி. அதாவது தான் ஆசையாக காதலித்து மணந்த பூஜாவை பிரிவதாக தெரிவித்தார்.மேலும் கடந்த ஏப்ரல் மாதம் பிறந்த மகனுக்கு பெயர் வைக்கும் பாக்கியம் கூட தனக்கு கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டார். தான் தவறான பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அனாதையாகிவிட்டதாகும் தெரிவித்திருக்கிறார் பிரதீப். மகனுடன் மனைவி கிளம்பிச் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

திவாகர் மிஸ்ஸிங்: பத்தாண்டு வாழ்த்துக்கள் சிரிப்பு வீடியோவில் தலைவன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை எங்கய்யா காணோம் என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். நல்ல வேளை பிக் பாஸ், அந்த வாட்டர்மெலனை காட்டவில்லை என மேலும் சிலர் கூறியிருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வீடியோ மட்டும் தர்பீஸ் கண்ணில் பட்டால் பிக் பாஸை வெளுத்து அவர் ஒரு வீடியோ போடப் போகிறார் என்கிறார்கள் சிலர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதற்கிடையே காமன்மேனில் இருந்து முனியம்மாவுக்கு பதிலாக ஆஷாவை பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 10வது சீசனில் குக் வித் கோமாளி குரேஷி, ஜாய் கிரிசில்டா கலந்து கொள்கிறார்களாம். அவர்களை அந்த வீட்டில் பார்க்க ஒரு கோஷ்டி ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது.

Source link