ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு யோகங்களை குறிப்பிடப்படுகின்றன. அதில் மிகவும் மங்களகரமான பலன்களை தரக்கூடியதாக கஜகேசரி யோகத்தை குறிப்பிடுகின்றனர். செப்டம்பர் 7ம் தேதி அன்று கடக ராசியில் குரு உச்சம் பெற்றும், சந்திரன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய கூடிய நாளில் இந்த அற்புத யோகம் உருவாகிறது. இதனால் கடகம், கன்னி உள்ளிட்ட ராசிகளுக்கு வெற்றிகளை அள்ளி தரக்கூடிய காலமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாக கஜகேசரி யோகத்தை குறிப்பிடுகின்றனர்.கடக ராசி குரு தற்போது உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். அதே சமயம் செப்டம்பர் 7ஆம் தேதி கடக ராசி அதிபதியான சந்திரன் ஆட்சி பெற்று சந்ததிப்பதால் கஜகேசரி யோகம் உருவாக்கியது. இந்த யோகத்தின் தாக்கம் காரணமாக சில ராசி நண்பர்களுக்கு நிதிநிலை மேம்படும். உடல் நலம் முன்னேற்றம். வேலை தொழிலில் லாபத்தை காண்பார்கள். எந்தெந்த ராசிகளுக்கு அற்புதமான காலமாக அமையப்போகிறது என தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் உருவாகக்கூடிய கஜகேசரி யோகத்தால் உங்களுடைய நிதிநிலை முன்னேற்றம் அடைவதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். மேலும் உங்களுடைய வருமானம் அதிகரிப்பதோடு, நீண்ட நாளுக்காக நிலவில் இருந்த பணமும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் பணியிடத்தில் பாராட்டை பெறுவீர்கள். மேலும் புதிய பொறுப்புக்கள் நல்லது நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் செய்யக்கூடிய லாபத்தையும், அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய நல்ல சூழலும் உருவாக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கவும், புதிய வீடு, மனை போன்ற சொத்து வாங்க வாய்ப்புகள் உண்டு.
கடக ராசி
கடக ராசி நண்பர்களுக்கு, உங்கள் ராசியில் உருவாக்கக்கூடிய கஜகேசரி யோகத்தால் மங்களகரமான பலன்களை அதிகம் பெறுவீர்கள். இதன் காரணமாக உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல நாட்களாக செய்ய நினைத்த செயல்களை முன்னெடுப்பதால் அதில் வெற்றி கிடைக்கும். மேலும் நீண்ட நாட்களாக தொந்தரவு தந்து வந்த உடல்நிலை பிரச்சினைகள் மெல்ல தீரும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட உங்கள் பேச்சு நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மேலும் இந்த காலத்தில் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடவும், குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வசதியும் வாழ்வதாரம் உயரும்.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களுக்கு கஜகேசரி யோகமானது லாப ஸ்தானத்தில் உருவாக்கக்கூடிய காரணத்தால் உங்களுடைய வெற்றியை முன்னேற்றமும் அதிகரிக்கும். நிதிநிலை தொடர்பான சாதகமான சூழல் உருவாகும். உங்களுடைய பணத்தை பெருக்குவதற்கான முயற்சிகளில் மற்றும் முதலீடுகளில் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் முக்கியமான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
பணியிடத்தில் உங்களுடைய கடின உழைப்பு மற்றும் திறமைக்கான பாராட்டு கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பான நல்ல சூழல் மாற்றம் ஏற்படும். நன்மை அதிகமாக நடக்கக்கூடிய இந்த காலத்தில் உங்களுடைய முயற்சிகளை அதிகரிப்பது நல்லது.
துலாம் ராசி
கடக ராசியில் உருவாகும் ‘கஜகேசரி யோகம்’ துலாம் ராசியினருக்குப் பல வகைகளில் நன்மை பயக்கும். இக்காலத்தில், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அல்லது வசதிகளுக்காகச் செலவு செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் பேச்சுத்திறன் மற்றும் ஆளுமையைக் கண்டு மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்; இதன் நேர்மறையான தாக்கம் பணியிடத்திலும் வெளிப்படும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல திருமண வரன் அமைய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வருங்கால துணையுடன் சில முக்கிய ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது. பணியிடத்திலும், குடும்பங்களுடன் விஷயங்களிலும் மகிழ்ச்சி மற்றும் பரஸ்பரம் புரிதல் இருக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த கஜகேசரி யோகமானது உங்களுடைய தொழில் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் புதிய வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான சிறந்த காலம் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நிதிநிலை வலுவடையும். குடும்பத்தினரின் ஆதரவு காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்ட வேலையை சரியாக முடிக்க முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய நாள்.
