இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கையில் கட்டியிருக்கும் கருப்பு பேட்ஸ் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடக்கும் போது தலைவர்களின் பேச்சு மட்டுமல்ல,அவர்களின் உடை,தோற்றம் மற்றும் அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கமான ஒன்று.அந்த வகையில்,புகைப்படத்தில் இருக்கும் இளம் அமைச்சர் ரமேஷ் அவர்களின் வலது கையில் அணிந்திருக்கும் அந்தப் பட்டை போன்ற கருப்பு நிறப் பொருள் பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டமன்றத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை..
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.முதல்வராக விஜய் பொறுப்பேற்று 2026-2027 நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அதன்படி,சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அவைக்குள் செல்போன் பயன்படுத்திய அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
சபாநாயகர் அறிவுறுத்தல்
அப்போது பேசிய சபாநாயகர், சட்டப்பேரவைக்குள் செல்போனை கொண்டு வருவதற்கும், அதை பார்த்துப் படிப்பதற்கும் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் ஷாஜகான் தனது செல்போனை உடனடியாக கீழே வைத்தார்.இதனைத் தொடர்ந்து சட்டபேரவையில் உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருப்பு நிறப்பொருள் என்ன?
இந்த நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அவர் துறைசார்ந்த கேள்விகளுக்கும்,புதிய திட்டங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது அவரது கையில்,வலது கையில் கருத்து நிறத்தில் வாஸ்ச் போன்று கையில் கட்டியிருந்தார்.இதை வெளியில் இருந்து பார்க்கும் போது இது ஒரு சாதாரண கைகடிகாரம் (Wrist watch) போலத் தோன்றினாலும், உற்று கவனித்தால் இதில் கடிகாரத்தின் முட்களோ அல்லது நேரத்தைக் காட்டும் திரையோ தெளிவாகத் தெரிவதில்லை. அப்படியானால் வலது கையில் கடிகாரத்திற்குப் பதிலாக அவர் அணிந்திருக்கும் அந்த கருப்பு சாதனம் என்ன? அதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமானக் காரணம் என்ன?
ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேண்ட்
இது கடிகாரத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேண்ட் (Smart Band) ஆகும். இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் உடலினையும் ஆரோக்கியத்தையும் உன்னிப்பாகக் கண்காணிக்க இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.சட்டமன்ற விவாதங்கள் மற்றும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும் போது உடலின் இதயத் துடிப்பு (Heart Rate) மற்றும் மன அழுத்த அளவைக் கண்காணிக்க இது உதவுகிறது.
வீன டிஜிட்டல் ஃபிட்னஸ் டிராக்கர்
ஒரு நாளில் எவ்வளவு தூரம் நடந்துள்ளார்கள்,உடலில் கலோரிகள் அளவு எவ்வளவு என்பதைக் கணக்கிடுகிறது.இத்தகைய ஃபிட்னஸ் பேண்டுகளின் திரை வழக்கமாக அணைந்து (Black screen) கருப்பு நிறப் பட்டையாகவே காணப்படும். கையை உயர்த்தும் போதோ அல்லது தொடும் போதோ மட்டுமே அதில் விவரங்கள் வெளிப்படும். அதனால் தான் புகைப்படத்தில் அது வெறும் கருப்பு நிறப் பொருளாகக் காட்சியளிக்கிறது. பொதுக் கூட்டங்கள் மற்றும் சட்டமன்றத்தில் இருக்கும் போது கைபேசியை (Mobile Phone) அடிக்கடி எடுத்துப் பார்க்க முடியாது. இத்தகைய ஸ்மார்ட் பேண்டுகள் புளூடூத் மூலம் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் முக்கியமான அழைப்புகள் அல்லது செய்திகள் வரும்போது, லேசான அதிர்வு மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். எனவே அமைச்சர் ரமேஷ் ஆரோக்கியத்தையும், தினசரி உடல் செயல்பாடுகளையும் துல்லியமாகக் கண்காணித்து, சுறுசுறுப்பாக பணியாற்ற உதவும் ஒரு நவீன டிஜிட்டல் ஃபிட்னஸ் டிராக்கர் ஆகும்.
Source link
