முதல்வர் விஜய் பேசுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Deepfake வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் இந்த வீடியோக்கள் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள தமிழக சைபர் கிரைம் சிஐடி, வீடியோவில் இடம்பெறும் தொலைபேசி அல்லது WhatsApp எண்களை தொடர்புகொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது. மேலும், போலி வீடியோக்களை உருவாக்கி பரப்பியவர்களை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருவதுடன், ஏற்கனவே பரவியுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வர் விஜய் மீதான தேசிய அளவிலான கவனம் அதிகரித்துள்ள நிலையில், அவரது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல்வர் விஜய் பேசுவது போன்ற தோற்றத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Deepfake வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதை தமிழக சைபர் கிரைம் சிஐடி கண்டறிந்துள்ளது.
விஜய் பெயரில் அறக்கட்டளை எனக் கூறி மோசடி
ஏற்கனவே முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடனும், ஏழை மக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாகவும் கூறி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விஜய் பேசுவது போல் AI Deepfake வீடியோ
தமிழக சைபர் கிரைம் சிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் விஜய்யைப் போல ஆள்மாறாட்டம் செய்து, இந்தி ஆடியோவுடன் உருவாக்கப்பட்ட AI தொழில்நுட்பத்திலான Deep fake வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும் சைபர் கிரைம் சிஐடி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்புடைய சமூக வலைதள கணக்குகள்?
முதற்கட்ட விசாரணையில், முதல்வர் விஜய்யைப் போல் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல போலி வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவை எனக் கூறப்படும் சில Facebook கணக்குகள் மூலம் பகிரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வீடியோக்களை உருவாக்கி பரப்பியவர்களை அடையாளம் காணும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Google-ஐ அலரவைக்கும் TVK! TVK Vijay Madurai Manaadu
போலி வீடியோக்களில் உள்ள எண்களை தொடர்புகொள்ள வேண்டாம்
இதுபோன்ற Deepfake வீடியோக்களில் தொலைபேசி எண்கள் அல்லது WhatsApp தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், பொதுமக்கள் அவற்றைத் தொடர்புகொள்ள வேண்டாம் என சைபர் கிரைம் சிஐடி அறிவுறுத்தியுள்ளது.மேலும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி வீடியோக்களின் உள்ளடக்கங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற AI Deepfake வீடியோக்களை நம்பி பணம் அனுப்பவோ, அதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவோ வேண்டாம் என்றும், இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு மோசடி முயற்சிகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வீடியோக்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் அதில் இடம்பெறும் தொலைபேசி எண்கள் அல்லது WhatsAppதொடர்புகளை பயன்படுத்த வேண்டாம் என சைபர் கிரைம் சிஐடி அறிவுறுத்தியுள்ளது. மேலும், போலி வீடியோக்களை உருவாக்கி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Source link
