TN Assembly Election| எங்க ஊருக்கு ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம்- கிராம மக்கள் பேனர் வைத்ததால் பரபரப்பு

அதில் வருகிற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம், தயவு செய்து ஓட்டு கேட்டு யாரும் எங்கள் ஊருக்கு வர வேண்டாம், போலியான மற்றும் அரசு அங்கீகரிக்கப்படாத போலி ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அதனை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

80 ஆண்டு காலமாக எங்கள் ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். குடிநீர் வசதி வேண்டும். ரேஷன் கடை வேண்டும். ஜவ்வாது மலை பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லை. பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Source link