விசிகவில் இருந்து திமுகவில் இணைந்த பனையூர் பாபு தனது சமூக வலைத்தளங்களில் தவெக அரசினை விமர்சித்து தொடர்ச்சியாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அப்பாவைக் காணோம் என முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பனையூர் பாபு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக சேலம் மாவட்டத்திற்குச் சென்றறார். அப்போது மூதாட்டி ஒருவர் அவரிடம், அரசாங்கம் தருகிற 1000 ரூபாயை வைத்துத்தான் வாழ்ந்து வருவதாக பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சினை திமுகவினர் அதிகளவில் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 1000 திட்டம் குறித்துதான் மூதாட்டி பேசியுள்ளார். இப்படி நீங்கள் எங்கு சென்றாலும் திமுகவின் திட்டம் இருக்குமென பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுகவை சார்ந்த பனையூர் பாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ் மக்களின் மனங்களில் வாழும் ‘அப்பா’ என பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் முதல்வர் சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என பேசி இருந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பெருமளவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.
