தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள் வந்திருக்கின்றன அதில் பல படங்கள் வெற்றியும் சில படங்கள் தோல்வியும் அடைந்து இருக்கின்றன. இந்த முறை வித்தியாசமாக டேடிங் ஆப் ஐ மையமாக வைத்து காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்….
நாயகன் சுதர்சன் கோவிந்த் அனைத்து தரப்பு இளைஞர்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரு டேடிங் ஆப் ஐ உருவாக்க முயற்சி செய்கிறார். அதில் எந்த வகை குணா நலம் கொண்ட மற்றும் எந்த வகை நிறம் கொண்ட மனிதர்கள் அனைவருக்கும் துணை கிடைக்கும் படி அந்த ஆப்பை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையே நாயகி அர்ச்சனா ரவி சினிமாவில் எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற முனைப்போடு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்குமே ஒரு வாய்ப்பு கிடைக்க அதில் இருவருமே தாங்கள் பர்சனல் வாழ்வில் காதல் வயப்பட்டால் மட்டுமே அந்த அனுபவம் மூலம் நாயகன் உருவாக்கும் செயலியை திறன் பட உருவாக்க முடியும் அதே சமயம் நாயகியும் ஒரு நல்ல காதல் கதையை உருவாக்க முடியும் என்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக காதலிப்பது போல் நடிக்கின்றனர். ஒரு அனுபவத்துக்காக காதலிக்கும் இருவர்கள் ஒரு கட்டத்தில் உண்மையாகவே காதலில் விழுகின்றனர். இதைத்தொடர்ந்து இவர்களின் காதல் வெற்றி பெற்றதா, இல்லையா? நாயகன் நாயகியின் லட்சியம் நிறைவேறியதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
எத்தனையோ காதல் திரைப்படங்களை நாம் கண்டிருக்கிறோம் இந்தப்படம் அதிலிருந்து சற்றே வேறுபட்டு வித்தியாசமான முறையில் இந்த கால இளசுகளுக்கு ஏற்றார் போல் டெக்னாலஜி கலந்த காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அதை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாக்கி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் அசோக் குமார் கலைவாணி. வழக்கம்போல் கதை காதல் கதையாக விரிகிறது போகப் போக அதனுள் சென்டிமென்ட் கலந்து குடும்பம் காதல் என விரிந்து இறுதி கட்டத்தில் ஒரு பீல் குட் காதல் படமாக முடிந்திருக்கிறது. கதையாக பார்க்கும் பட்சத்தில் வித்தியாசமாக இருந்தாலும் அதை கொடுத்த விதம் என்பது நாம் வழக்கமாக பார்க்கும்படியான திரைக்கதை அம்சத்துடன் அமைந்திருக்கிறது. படம் ஆரம்பித்து போகப் போக வேகம் எடுக்கும் திரைப்படம் இரண்டாம் பாதியில் இருந்து அழுத்தம் நிறைந்த காட்சிகளாக விரிந்து இறுதி கட்டத்தில் நிறைவாக முடிந்திருக்கிறது. அடுத்தடுத்து நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே கணிக்கும்படி இருப்பது படத்திற்கு சற்றே மைனஸ் ஆக இருக்கிறது. மற்றபடி வழக்கமான படமாகவே இருந்தாலும் சில சில இடங்களில் ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்துடன் நம்மை ஒன்றை வைத்து இருக்கிறது. திரைக்கதையில் இன்னமும் கூட புதுமைகளை புகுத்தி இருக்கலாம்.
நாயகன் சுதர்சன் கோவிந்த் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நடிப்பில் பல இடங்களில் புதுமுகம் என்ற உணர்வை கொடுத்திருக்கிறார். இன்னமும் கூட அனுபவம் தேவைப்படுகிறது. நாயகி அர்ச்சனா ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் நாயகி காண கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. கதைக்கு என்ன தேவையோ அதற்கான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். தாத்தாவாக வரும் ஒய் ஜி மகேந்திரன் தன் அனுபவம் நடிப்பின் மூலம் கவர்கிறார். தாய் வித்யா அனுதாபம் ஏற்படும்படியான நடிப்பின் மூலம் கவனம் பெற்று இருக்கிறார். நண்பராக வரும் விஜே பப்பு மற்றும் நாயகி நண்பராக நடித்திருக்கும் நடிகையும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
ராஜா பட்டாச்சாரியார் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். அஸ்வின் ஹேமந்த் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக உருவாகி இருக்கிறது. எந்த காட்சிகளுக்கு எந்த வகை இசை தேவையோ அதை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் தன் பங்கு காதல் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
காதல் கதையாக இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ப வித்தியாசமான படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நாயகன் உருவாக்கும் செயலியை இன்னும் கூட தெளிவாகவும் டீடைல்டாகவும் காண்பித்திருக்கலாம். வித்தியாசமான கதையை யோசித்து இயக்குனர் திரைக்கதையில் இன்னமும் கூட வித்தியாசத்தை காண்பித்து இருந்தால் இந்தப் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.
நீ ஃபார் எவர் – கப்பிள்ஸ் பிரண்ட்லி!
