திருமண நிகழ்வில் பா@லியல் சீண்டல்-தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

தவெகவின் திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருபவர் பிரகாஷ் என்கிற குட்டி. நேற்று முன்தினம் விஜய் பூந்தமல்லி தொகுதியின் வேட்பாளராக விஜய்யால் அறிவிக்கப்பட்டிருந்தார். திருவள்ளூரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திருமண நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த நிகழ்வில் பிரகாசமும் கலந்து கொண்டுள்ளார். அதே திருமணத்தில் கலந்துகொண்ட மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமைக்கு புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அந்த பெண் நிர்வாகி கணவருடன் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் தற்பொழுது திருவள்ளூர் நகர போலீசார் விசாரணை செய்து, பிரகாசம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

Source link