நமது நிருபர்
திரையில்
பார்த்த நடிகர் தெருவுக்கு வந்துள்ளார். அதனால் பார்க்க மக்கள்
வந்துள்ளனர் என விஜய்க்கு வரும் கூட்டம் பற்றி மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்
சண்முகம் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் சண்முகம்
கூறியதாவது: மற்ற கட்சிகளை போல் இல்லாமல், நடைமுறைக்கு சாத்தியமான மற்றும்
100% நிறைவேற்ற கூடிய அளவில் திமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது; சூப்பர்
ஸ்டாராக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது.
இந்தியாவில் யாரும்
சொல்லாத வாக்குறுதிகளை திமுக அறிவித்துள்ளது. முன்னதை விட மிகச்சிறப்பான
தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு புதிய மின்
மோட்டார்கள் வழங்கப்படும் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
அரசின்
திட்டங்களால் பயன் பெற்ற மக்கள் கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு
வாக்களிப்பார்கள். நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை பல்வேறு
கட்சிகள் அளித்துள்ளன. திமுக 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
எந்த
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டு சொன்னால்
பதிலளிக்கிறோம். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட்
வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவார்கள். திரையில் பார்த்த நடிகர்
தெருவுக்கு வந்துள்ளார். அதனால் பார்க்க மக்கள் வந்துள்ளனர். இவ்வாறு
சண்முகம் கூறினார்.
