சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்.. விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு – m vijay announces under rule 110 international-standard motorsports city

முதல்வர் விஜய் விதி எண் 110ன் கீழ் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டபேரவை கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் இன்று 110 கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு சுற்றுலாவை விரிவுபடுத்தவும் தமிழ்நாட்டில் ஒரு புதிய ” மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் ” ( Motor Sports City ) உருவாக்கப்படும். இந்நகரத்தில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 (Formula 1, 2, 3, 4) உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான வசதிகள் இங்கு உருவாக்கப்படும். இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்கவும், தமிழ்நாட்டை சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் (High Performance Training Centre), அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.

Source link