ரஜினியும், சூரியும்: செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸாகும் தன்னுடைய மண்டாடி படம் தொடர்பாக சூரி அளித்து வரும் பேட்டிகள் சுவாரஸ்யமாக உள்ளது. இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகன் என்று மீண்டும் ஒரு முறை கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் பற்றி சூரி கூறியதாவது, தீபாவளிக்கு புது சட்டை வாங்கி அதை அணிந்து தலைவரின் தளபதி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றேன். அந்த சட்டை கிழிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் ஊருக்குள்ளேயே சுற்றினேன். சாரை பார்த்து தான் ராமன் எனும் என் பெயரை சூர்யா என மாற்றினேன். சூர்யாவாக சினிமாவுக்கு வந்தபோது சூரியாக மாறினேன். நான் தலைவரின் வெறித்தனமான ரசிகன்.
எஜமான் படத்திற்கெல்லாம் பயங்கரமாக கொண்டாடினோம். தலைவர் படம் ரிலீஸாகும் நாள் எல்லாம் மிகப் பெரிய பண்டிகை தான் எங்களுக்கு. தளபதி, பாட்ஷா பார்க்கும்போது எல்லாம் என்ன ஒரு ஃபீல். அப்படி இருக்கும்போது தலைவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு பெருமை. அண்ணாத்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
மண்டாடி ரிஸ்க்: மண்டாடி படம் வெற்றி பெறட்டும் என ரஜினி ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் விடுதலை படத்தில் நடித்துவிட்டதால் மண்டாடியில் எளிதில் நடித்துவிடலாம் என வெற்றிமாறனிம் கூறியிருக்கிறார் சூரி. ஆனால் மண்டாடியில் நடித்தது எளிது இல்லை என்கிறார். சூரி தெரிவித்ததாவது, மண்டாடியுடன் ஒப்பிடும்போது விடுதலைக்கு போட்ட எஃபர்ட் 10 சதவீதம் தான். அங்கு ஏதாவது நடந்தால் போலீஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் தூக்கிக் கொண்டு போயிடுவார்கள். இங்கு அவன் உயிரை காப்பாத்த அவன் முதலில் குதிக்கிறான்.
இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இன்சூரன்ஸ் எடுத்தேன். இதுவரைக்கும் நான் இன்சூரன்ஸ் எடுக்காமல் இருந்தேன். மொத்த குடும்பத்திற்கும் இன்சூரன்ஸ் எடுத்தேன். யாரையும் நம்பக் கூடாது என மனைவி, பிள்ளைகளுக்கு ஹின்ட் கொடுத்துவிட்டு ஷூட்டிங் சென்றேன்.
படகு விபத்து: காலையில் 7.30 மணிக்கு கடலுக்கு சென்றால் மாலை தான் திரும்பி வருவோம். கடலில் தான் படப்பிடிப்பு. உங்களுக்கு நீச்சல் தெரியுமா என கேட்டார்கள். சுமாரா தெரியும், கொஞ்ச நேரம் சமாளிப்பேன். ஆனால் கடலில் நீச்சல் அடித்தது இல்லை என்றேன். படகில் இருந்து குதிக்கும் காட்சியை ஷூட் செய்தார்கள். நீங்கள் கடலில் குதித்து 10 அடி தள்ளி மேலே வரே வேண்டும் என்றார்கள்.
நான் நீரில் இருந்து மேலே வரும்போது வேறு ஏதாவது போட் வராது தானே என கேட்டதற்கு, அது சொல்ல முடியாது என்றார்கள். ரேஸில் படகு கவிழ்ந்தால் என்ன செய்வது என கேட்டால் அப்படி எல்லாம் நடக்காது என்று சொன்ன வேகத்தில் படகு கவிழ்ந்துவிட்டது. படகு சாய்ந்ததும் நான் கடலில் குதித்துவிட்டேன். உடனே எல்லோரும் குதித்து வெளியே வந்துவிட்டார்கள். தலையை கணக்கு எடுத்தால் என்னை மட்டும் காணவில்லை. தேடிப் பார்த்தால் 10 அடி தள்ளி நான் இருந்தேன். அதற்குள் எப்படிணே அங்கு போனீர்கள் என்று கேட்டார்கள் என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சூரி இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கும் மண்டாடியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே ஜி படத்தில் கம்பெனி ஆர்டிஸ்டாக நடித்தபோது அஜித் குமாரை திட்டிஅவரிடம் மாட்டி பாராட்டப்பட்டதை தெரிவித்திருக்கிறார் சூரி.
Source link
