காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி; அரசனின் அடுத்த அப்டேட்

‘வடசென்னை’ கதைக்களத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ‘அரசன்’. வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு, ஆரம்பம் முதற்கொண்டே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இதில், ஆண்ட்ரியா, யோகிபாபு மற்றும் பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதனிடையே, இவர்களுடன் விஜய்சேதுபதியும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.  

இந்நிலையில், விஜய் சேதுபதி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே, சேதுபதி மற்றும் செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் அவர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கேங்க்ஸ்டர் பாடமாக உருவாகிவரும் இப்படத்திலும் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதே கதைக்களத்தைக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள அரசன், மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என ரசிகர்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இப்படத்தில் ரசிகர்களால் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபலங்கள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

Source link