காவலர்களுக்கு குட் நியூஸ்.. பணிக்காலத்தில் உயிரிழந்தால் குடும்பத்துக்கு ₹1 கோடி – முதல்வர் விஜய் அறிவிப்பு – chief minister vijay announces rs 1 crore for the family if police personnel die in the line of duty

காவல்துறை அறிவிப்புகள்

புதிய பணியிடங்கள் மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்படும்.காவலர்கள் நியமனம் தமிழ்நாடு காவல்துறையில் நடப்பாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.போதைப்பொருள் ஒழிப்பு ஊக்கம் போதைப்பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமங்களுக்குத் தலா ₹10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.நவீனமயமாக்கல் ₹212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். இதில் செயற்கை நுண்ணறிவு (AI), நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும்.சில்லறை செலவின நிதி (Contingency Fund) லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கு அனுமதித்திருந்த சில்லறை செலவின நிதி உயர்த்தி வழங்கப்படும்.உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் பணியின் போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ₹1 கோடி வழங்கப்படும்.கருணைத் தொகை உயர்வு பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை (Ex-gratia) ₹20 லட்சத்திலிருந்து ₹30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.வண்டலூர் விளையாட்டு அரங்கம் வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் சுமார் ₹23 கோடி செலவில் அமைக்கப்படும்.DNA பரிசோதனை மையங்கள்
சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் (DNA testing facilities) சுமார் ₹14 கோடி செலவில் நிறுவப்படும்.

புதிய வாகனங்கள்

காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ₹200 கோடி செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அறிவிப்புகள்

புதிய நிலையங்கள்: 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் சுமார் ₹16 கோடி செலவில் நிறுவப்படும்.

குடியிருப்புகள் கட்டப்படும்

10 இடங்களில் தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் சுமார் ₹80 கோடி செலவில் கட்டப்படும்.

பயிற்சி அகாடமி: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சி அகாடமியின் (Fire and Rescue Services Training Academy) இரண்டாம் கட்டப் பணிகள் ₹50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Source link