சென்னை: தேர்தல் விதி மீறியதாக விஜய் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு என்றால் அதற்கு காரணத்தை சொல்லி இருக்க வேண்டும். அது ஏதாவது இருக்கிறதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: களத்தில் நின்றவர் விஜய், அவருக்கு தான் என்ன குறைபாடு என்று தெரியும். அவர் மீது வழக்கிற்கு தேர்தல் கமிஷன் என்ன காரணம் சொல்கிறது என்று தெரியவில்லை. வழக்கு என்ன காரணம். 5 பிரிவின் கீழ் வழக்கு என்றால் அதற்கு காரணத்தை சொல்லி இருக்க வேண்டும். அது ஏதாவது இருக்கிறதா? என்னை எடுத்துக்கொண்டால் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்கிறது இல்லை.
உங்களுக்கு புரிகிறது என நினைக்கிறேன். அது எதிர்பார்ப்பதும் இல்லை. அதனால் எனக்கு அந்த பிரச்னை இல்லை. விஜய்க்கு என்ன பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்று அவரு தான் சொல்ல வேண்டும். எனக்கு ஏதும் தெரியாது. நான் வேறு களத்தில் இருக்கிறேன். அதனால் எனக்கு தெரியாது. டாஸ்மாக்கில் சரக்கு விற்பனை செய்து மக்களை குடிக்க வைத்து, குற்றம் நிறைந்த சமூகமாக மாற்றிவிட்டார்கள். இரண்டு வயதை குழந்தையை பாலியல் செய்து ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அவனது மனநிலை சராசரியாக இல்லை.
மனநோயாளி மாதிரி, குடி நோயாளியாக மாற்றிவிட்டீர்கள். மதுப்பிரியர்களாக ஆக்கிவிட்டீர்கள். இஸ்லாமியர்கள் வாக்கை தக்க வைப்பதற்காக வருபவன் போகிறவனை எல்லாம் பி டீம் என்கிறார்கள். பாஜ வளர திமுகவே காரணம். தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற காரணம் திமுகதான். இது, தமிழ்நாடு பெயரில்; தமிழுக்கும் தமிழனுக்கும் சுடுகாடு. நீ தமிழன் இல்லை. நீ தமிங்கிலன். ஒரு புது இனம். நான் மறு உருவாக்கம் செய்கிறேன். துாய தமிழர்களாக என் இனத்தை மாற்றப் போகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
