சட்டபேரவையில் மோதிக்கொண்ட ஆதவ் அர்ஜூனா உதயநிதி ஸ்டாலின்.. முதல்வருக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. – aadhav arjuna udhayanidhi stalin clash tvk government 116 days law and order issue

சட்டபேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தவெக அரசின் 116 நாட்களில் 556 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான். பாஜக அடித்தால் வலித்தால் கூட கத்த கூடாது என்ற நிலையில் தவெக அரசு உள்ளது .மாணவர்கள் போராட்டத்தை கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பியது முதலமைச்சருக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்கள் எங்களுக்கு கேள்வி கேட்கும் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். சரியான கேள்வியைக் கேட்டு உங்களிடம் பதில் வாங்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.எனவே, லாஜிக்கே இல்லாத குட்டி கதைகள் சொல்லாமல் முதலமைச்சர் நேரடியாகப் பதிலைச் சொல்ல வேண்டும். ரீல்ஸ் கண்டெண்டுக்காக இல்லாமல்; ரோல் கேமரா ஆக்ஷன் இல்லாமல் டேக் டைவர்ஷன் இல்லாமல் பதிலளிக்க வேண்டும்.

முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. நன்றாக தயார் செய்து வாருங்கள். இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். அதிகாரிகளிடம் கேட்டு முதலமைச்சர் பதிலுரைக்கு தயாராக வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 2020-ல் 1,597 கொ*லகள், 2021-ல் 1,597 கொ*லகள், 2022-ல் 1,597 கொ*லகள் நடந்துள்ளன. 3 ஆண்டுகளில் ஒரே மாதிரி 1597 கொ*லகள் பதிவானது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். மேலும், எங்கள் முதலமைச்சருக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.முதலமைச்சர் தயாராகி இருந்ததால் தான் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள் என்று கூறினார்.

Source link