புதுச்சேரியை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத விசித்திரமான கூட்டணி எதிரில் போட்டியிடுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சி கட்டுப்பாட்டை மீறி வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் சார்பில் 6 வேட்பாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதுவே கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததற்கான உதாரணம்.
அதேபோல் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணியில் பரஸ்பர மரியாதை இல்லை. 30 தொகுதிக்கு கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒருமித்தமாக செயல்பட முடியாத கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சி வழங்கும்?
