காணொளிக் குறிப்பு, காணொளி: மகள்களின் கல்விக் கட்டணத்திற்காக வெறும் காலில் மாரத்தான் ஓடிய தாய்
காணொளி: மகள்களின் கல்விக் கட்டணத்துக்காக வெறும் காலில் மாரத்தான் ஓடிய தாய்
பிரசுரிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்
சேலை அணிந்து வெறும் கால்களுடன் ஓடும் இந்த பெண் தான் ராமபாய் ரன்வீர். தனது மகள்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் இவர் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்த மாரத்தானுக்காக அவர் சிறப்பு பயிற்சி எடுக்கவில்லை. ஸ்போர்ட்ஸ் ஷூ வைத்திருக்கவில்லை. சாதாரண செருப்போடு மாரத்தானில் ஓடத் தொடங்கிய ராமபாய் செருப்பு அடிக்கடி கழன்றதால் அதை கையில் வைத்துக்கொண்டு பந்தய தூரத்தை எட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் தாய் முதலிடமும் மகள் இரண்டாம் இடமும் பிடித்தனர். தாய்க்கு 3,000 ரூபாயும் மகளுக்கு 2,000 ரூபாயும் பரிசு வழங்கப்பட்டன.
தனது கணவரை இழந்த ராமபாய் மகள்களின் கல்விக்காக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தாலும், தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
