‘‘தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனுவை தள்ளுபடி செய்க’’: இந்து முன்னணி

தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Source link