புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் தர்மம் இருக்கிறதா? கூட்டணி தர்மத்தை மீறி சிபிஎம், விடுதலை

புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் தர்மம் இருக்கிறதா? கூட்டணி தர்மத்தை மீறி சிபிஎம், விடுதலை சிறுத்தைக் கட்சி தனித்து போட்டியிடுகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பாஜ மாநில தலைவர் ராமலிங்கத்தை ஆதரித்து, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது: புதுச்சேரியில் இண்டி கூட்டணி என்பது குழப்பமான கூட்டணி. இண்டி கூட்டணியில் தர்மம் இருக்கிறதா? கூட்டணி தர்மத்தை மீறி சிபிஎம், விடுதலை சிறுத்தைக் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எங்குமே இல்லாத ஒரு விசித்திரமான கூட்டணியை அமைத்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மக்களுக்காக எப்படி ஒழுக்கமான ஆட்சியை கொடுக்க முடியும். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. இவர்களால் ஒரு கூட்டணியை கூட ஒழுங்காக அமைக்க முடியவில்லை. பரஸ்பர ஒரு மரியாதை கிடையாது. 30 தொகுதிகளில் இவர்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்து அந்த பேச்சையும் கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

கூட்டணி அமைப்பது, வேட்புமனு தாக்கல் செய்வது என அனைத்திலும் தோல்வி. எல்லா வகையிலும் இண்டி கூட்டணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நாளில் மீண்டும் அவர்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது. மக்கள் இவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார்கள். 30 தொகுதிகளை கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒற்றுமையாக இண்டி கூட்டணி கட்சியினரால் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்

புதுச்சேரியில் அண்ணாமலை மேற்கொண்ட தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link