Mercury Transit In Virgo Effects,உச்ச பலனை தரப்போகும் புதன் பகவான்: அடுத்து 20 நாட்களுக்கு சிறப்பானதாக அமையப்போகும் ராசிகள் – mercury’s strong influence: zodiac signs set to experience favorable results over the next 20 days

நவகிரகங்களின் இளவரசன் ஆன புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் தேதி சிம்ம ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இங்கு ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள புதன் பகவான் அவருடைய முழு பலனை தர உள்ள காரணத்தால் சிலர் ஆசிகள் பெரிய அளவில் நன்மை அடைய உள்ளனர். குறிப்பாக அவர்கள் செய்யக்கூடிய வணிகம், தொழில் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். புதிய யோசனைகள் மூலம் நிதி நிலையை மேம்படுத்தி கொள்வார்கள். எந்தெந்த ராசிகள் அதிக நன்மை அடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தின்படி புதன் பகவான் அறிவு, பேச்சுத்திறன், தனி திறமைகள், புத்தி கூர்மையை தரக்கூடியவர். இவர் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் செப்டம்பர் 7ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ள காரணத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான சூழல் ஏற்பட உள்ளது. அவருடைய குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றவும், தங்களுடைய வேலை, தொழில் தொடர்பான பணிகளை திட்டமிட்டு அதில் பெரிய வெற்றியையும் அடைவார்கள். கிருஷ்ண ஜெயந்திக்கு பின்னர் நடக்கக்கூடிய இந்த பெயர்ச்சியால் நன்மை அடைய உள்ள ராசிகளை தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புதன் சஞ்சாரம் நடக்க உள்ளதால், உங்கள் பிள்ளைகள் மூலம் சாதகமான மற்றும் சுபமான செய்திகளை கேட்பீர்கள். கல்வித்துறை தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். வணிக சூழல் நேர்மறையானதாகவும், லாபம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நிதி ஆதாயங்கள் வலுவடைய கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களுடைய பிள்ளைகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். மேலும் உங்களுடைய உடல்நலம் மேம்படும்.

சிம்ம ராசி

சிம்மராசி சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய தனஸ்தானத்தில் புதன் பகவானின் பெயர்ச்சி நடப்பதால் பலவிதத்தில் சாதகமான பலன்களை பெறுபீர்கள். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் அதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழலை தரும். அன்புக்குரியவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பணியிடத்தில் நீங்கள் விரும்பிய முடிவை பெற சரியான திட்டமிடல் தேவைப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். அதன் காரணமாக முடங்கிக் கிடந்த பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். மேலும் உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும்.

மகர ராசி

மகர ராசி அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதனின் பெயர்ச்சி நடக்க உள்ளது. இதன் காரணமாக உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மேலும் உங்களுடைய ஆளுமை திறன் மேம்படும். உங்களுடைய சொந்த முயற்சிகள் மூலம் வேலை, தொழில் தொடர்பான இலக்கை அடைய முடியும். நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக அமையும். அதேசமயம் பழைய முதலீடுகளில் இருந்து நீங்கள் லாபத்தையும் பெறுவீர்கள். மன அமைதி கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு அதிக அளவில் நன்மை கிடைக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுகள் சரியானதாக இருக்கும். மேலும் புதிய திட்டங்கள் உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புகள் உண்டு.குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் தீர்க்க முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். நீங்கள் நிலம், வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான முயற்சியில் இருப்பவர்களுக்கு அது சாத்தியப்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முழுமையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.

Source link