திருப்பூர் : ஹிந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனி தொகுதியில் போட்டியிடும் வேற்று

திருப்பூர் : ஹிந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனி தொகுதியில் போட்டியிடும் வேற்று மதத்தை சேர்ந்தவர்களின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் உள்ள, 234 தொகுதிகளில், 46 தனி தொகுதிகள் உள்ளன. ஹிந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிட கூடிய, இந்த தொகுதிகளில் கிறிஸ்துவ மற்றும் வேற்று மதத்துக்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்துவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர், ஹிந்து பட்டியல் சமூகத்தவர் என, போலியாக சான்றிதழ் பெற்று, அதனடிப்படையில் தனி தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிகிறது.

தனி தொகுதி என்பது, ஹிந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பிலும், மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளை பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இச்சூழலில், சட்டத்தையும், அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்துக்கு மாறியவர்கள், தங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று, ஹிந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், ஹிந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிட கூடிய தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

சிறுவயதில் ஹிந்துவாக இருந்த போது, ஹிந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள், இடைகாலத்தில் மதம் மாறியதை மறைத்து, பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.எனவே, தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும், அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும், தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து, வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலி சான்றிதழ்களை ரத்து செய்து, அவர்கள் வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்யுமாறு ஹிந்து முன்னணி கேட்டு கொள்கிறது.

தனி தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதி சான்றிதழ் குறித்தும் எழும் ஆட்சேபனைகளையும், தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழகத்தில் சாதி சான்றிதழ் வழங்கும் தாசில்தார், தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தை சார்ந்தவர்கள் தான் என, உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலி சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதனை ரத்து செய்து, ஹிந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Source link