சினிமாவிலும் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வரும் அஜித் திரைப்படம் பொறுத்தவரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். அதே சமயம் கார் ரேஸ் பொறுத்தவரை அடுத்ததாக பெல்ஜியமில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதனிடையே நேற்று மாலை மாமல்​லபுரம் மல்​லிகேஸ்​வரர் கோயி​லில் சிறப்பு வழி​பாடு செய்​தார்.
இப்போது சென்னையில் தனது குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். அந்த வகையில் ‘எஃப்சி மெட்ராஸ்(FC Madras)’ கால்பந்து கிளப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியாணி செய்து கொடுத்தார். அப்போது அஜித்துடன் ஷாலினியும் சென்றிருந்தார். அஜித் பிரியாணி செய்யும் போது, ‘நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா’ என ஷாலினி கேட்பதும் பின்பு புகைப்படம் எடுக்கும் போது ‘அஜித் இங்க பாரு’ என்று ஷாலினி சொன்ன போது ‘எங்க’ என அஜித் கேட்பதும் அங்கிருப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒரு கோயிலில் ஷாலினி அஜித் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, உடனே வீட்ல போய்ட்டு நான் விழனும் என அஜித் கலாய்க்க அந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து சமூக வலைதளத்தில் வைரலானது.
Shalini mam – naa sona Mari paniyacha 😁
Ajith enga paru 🤩 Pookie couples 😁#AjithKumar#ShaliniAjithKumar#AKpic.twitter.com/G95wNgI9tS
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) March 30, 2026
