வரி பாக்கி; ஜெயலலிதாவுக்குச் சொந்தமான இல்லத்திற்குச் சீல்!

வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான இல்லத்திற்கு ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத் ஸ்ரீநகர் காலணியில் 4 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று இருந்துள்ளது.  இந்த இல்லம், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அலுவலகமாக பயன்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் அவர் மறைவுக்கு பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அந்த இல்லத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரி கட்டப்படாமல் இருந்துள்ளது.

அந்த இல்லத்திற்கு ரூ.82 லட்சம் வரி பாக்கி இருந்த நிலையில், அந்த வரியை கட்ட வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழ்னக்கியுள்ளது. ஆனால், அந்த நோட்டீஸுக்கு எந்தவொரு பதிலும் கிடைக்காததால், அந்த இல்லத்திற்கு ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 

Source link