சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலையில் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லை. கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று கேரட் தவிர்த்து எஞ்சிய காய்கறிகள் அனைத்தும் அதே விலையில் தொடர்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். சின்ன வெங்காயம் விரைவில் 100 ரூபாயை எடலாம் எனத் தெரிகிறது.
செப்டம்பர் 4, 2026 நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் காய்கறி விலையில் பெரிதாக ஏற்றமின்றி இருப்பது பொதுமக்களுக்கு பெரிதும் ஆறுதலாக அமைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் நிலவரம் குறித்து எஸ்.எஸ்.முத்துக்குமாரிடம் சமயம் தமிழ் சார்பாக கேட்கையில், கேரட் விலை மட்டும் குறைந்துள்ளது. எஞ்சிய காய்கறிகளின் விலையில் மாற்றமில்லை. ஊட்டி கேரட் 10 ரூபாய் குறைந்து முதல் தரம் 60 ரூபாய், இரண்டாம் தரம் 50 ரூபாய், மூன்றாம் தரம் 40 ரூபாய் என விற்கப்படுகிறது. மலூர் கேரட்டை பொறுத்தவரை 5 ரூபாய் குறைந்து இரண்டாம் தரம் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல் தரத்தில் எந்தவித மாற்றமும் இன்றி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Source link
