அமைச்சர் மரிய வில்சன் வழக்கின் பின்னணியில் அரசியல்.. யாரோ இயக்குகிறார்கள்: வழக்கறிஞர் அளித்த தகவல் – lawyer said about regarding the case involving minister maria wilson

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது சகோதரரை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே அவரையும், அவருடைய மனைவி கெரோலின் இருவரையும் அமைச்சர் மரிய வில்சன் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள்.

அமைச்சர் மரிய வில்சன் வழக்கு

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கில் மரிய வில்சன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த நிலையில், தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதோடு வழக்கினை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இங்கிலாந்து அரசரா என உயர்நீதிமன்றம் கண்டிப்பு

இதனையடுத்து “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா” என உயர்நீதிமன்றம் கடும் கேள்வியை எழுப்பியது. அதோடு புதுச்சேரி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டது. இப்படியானான் நிலையில் இன்றைய தினம் அமைச்சர் மரிய வில்சன், சகோதரை தாக்கிய விவகாரத்தில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கறிஞர் பேட்டி

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில் எனது கட்சிக்காரர் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் பென்ட்ரைவ் ஆகியவற்றை இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி பெற்றுக் கொண்டார். இந்த வழக்கின் முக்கியமான அம்சம் என்னவென்றால் இச்ச்மபவங்கள் அனைத்தும் 2022 ஆம் ஆண்டு நடந்தது. அதனை தொடர்ந்து 2026 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முழுவதும் அரசியல் பின்புலம்

இந்நிலையில் தற்போது வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பின்பக்கம் இருந்து 2026 ஆம் ஆண்டில் எதிர் தரப்பினர் தொடுத்துள்ளனர். 2022 ஆம் ஆண்டிலிருந்து 2026 வரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கட்சிக்காரர் எம்எல்ஏ, மந்திரி ஆனதற்கு பின்புதான் இந்த வழக்கிற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்கள். இதற்கு முழுக்க முழுக்க அரசியல் பின்புலம் தான் காரணம். அவர்கள் பின்னாடி இருந்து யாரோ இயக்குவதை போன்று எனது கட்சிக்காரருக்கு சந்தேகம்.

அமைச்சர் ஆனதற்கு பின்பு வழக்கு தீவிரம்

ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம் என்றார். மேலும் எனது கட்சிக்காரர் அமைச்சர் ஆவதற்கு முன்பாகவே பலமுறை ஆஜராகியுள்ளார். அமைச்சர் ஆனதற்கு பின்புதான் இந்த வழக்கினை தீவிரப்படுத்தியுள்ளார்கள். இதற்கு முழு காரணம் அரசியல் பின்புலம் தான் எனவும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

உருக்கமாக பேசிய மரிய வில்சன்! கூர்ந்து கவனித்த அவையினர்

தொடர்ந்து பேசிய அவர் 2022 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு தற்போது உயிரோட்டம் அளிக்கப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள். எப்படி திடீரென இவ்வழக்கு உயிர்ப்பெற்றது எனவும் வழக்கறிஞர் பேசினார். இதனையடுத்து யார் பின்னணியில் உள்ளார்கள் என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தற்கு, அதனை நீங்கள் தான் கண்டுபிடிக்கனும் என்றார் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர்.

Source link