Magha Nakshatra Astrology,மகம் நட்சத்திரத்தில் கேது: ஆட்சி பலத்தால் வளமும் முன்னேற்றமும் பெறும் சில ராசிகள் – ketu in magha nakshatra: zodiac signs that may experience growth and positive changes

ஜோதிடத்தில் கேது பகவான் மர்ம கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவருடைய நகர்வு மற்றும் மற்றும் தாக்கம் காரணமாக சில ராசிகள் உடைய வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும். குறிப்பாக நல்ல பலன் பெறக்கூடிய ராசியை சேர்ந்தவர்களுக்கு தொழில், நிதிநிலை மற்றும் உறவுகள் மேம்படும். எந்தெந்த ராசிகள் இந்த காலம் அதற்கு மாறாக மாறும் என தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜோதிடத்தில், நிழல் கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது, இவை நவ கிரகங்களில் ஒன்றாக குறிப்பிட்டாலும் அவற்றிற்கான தனி ராசி ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ராசியிலும் உள்ள நட்சத்திரங்களில் சிலவற்றிற்கு அதிபதியாக இருக்கின்றன. அந்த விதத்தில் தற்பொழுது சிம்ம ராசியில் சந்திக்கக்கூடிய கேது, அவரை அதிபதியாக இருக்கக்கூடிய மகம் நட்சத்திரத்தில் வந்திருக்கக்கூடிய காலத்தில் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை அதிகமாக தருவார் என்று தெரிந்து கொள்வோம்.

கேது மகம் நட்சத்திரத்தில் சஞ்சாரம்

ஜோதிடத்தில் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது அசுப கிரகங்கள் என குறிப்பிடுவதோடு, பெரும்பாலும் எவையும் தீய பலன்களை தரக்கூடியன. சில நேரங்களில் சுப கிரகங்களின் பார்வை, அல்லது மற்றவர்களின் நல்ல அமைப்பு காரணமாக நற்பலன்களை தர வாய்ப்புகள் உண்டு. அன்றைய விதத்தில் கேது தன்னுடைய சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு சந்திக்கும் போது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்களை தருவார்கள். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமானதாக அமையும் என தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு கேதுவின் இந்த நட்சத்திர மாற்றம், உங்களுக்கு நேர்மையான பலன்களை தரக்கூடியதாக இருக்கும், சில காலமாக இருந்த தடைகள், நீங்கள் எதற்கு கொண்டு வந்த சிரமங்கள் நீங்கும். தடைப்பட்டு வந்த உங்கள் வேலையை முடிக்க முடியும். மேலும் உங்கள் வாழ்க்கையில் நல்ல சூழல் உருவாகும்.
வேலை தொடர்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், புதிய முயற்சிகளை எடுக்கவும் நினைப்பீர்கள். இந்த காலத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். அதோட உங்களுடைய நிதிநிலை முன்பு விட வெகுவாக மேம்படும்.காலத்தில், மிதுன ராசிக்காரர்கள் அவசரப்பட்டு எந்தப் பெரிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களுக்கு உங்களுடைய லாபஸ்தானத்தில், கேது சஞ்சாரம் செய்வதனால் தொழில் ரீதியாக சாதகமான பலன்களை பெறுவதற்கு. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்க கூடியதாக இருக்கும். உங்களுடைய புகழ், மரியாதை மற்றும் பணியிடத்தில் அந்தஸ்து உயரும். புதிய திட்டங்கள் அல்லது முதலீடு தொடர்பான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். நிதானமாக செயல்பட்டால் வெற்றியும் லாபமும் அதிகரிக்கும். உங்கள் பணிகளையும் முழுமையாக முடிக்கக்கூடிய திறனுடன் இருப்பீர்கள்.
தொழில் வியாபாரம் செய்யக்கூடிய துலாம் ராசி அன்பர்களுக்கு அற்புத வாய்ப்புகளை பெறுவார்கள். முன்னர் நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் லாபமும் அல்லது பிறந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். ஒட்டு மொத்தத்தில் மங்களகரமான சூழல் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு, கேதுவின் நகர்வு நிதிநிலை ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றத்தை தரும். புதிய வழிகளில் வருமானத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் புதிய பொறுப்புக்களை ஏற்க வாய்ப்பு உண்டு.

தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடிய மீன ராசி அன்பர்கள், இந்த காலத்தில், சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் பெரிய இலக்கை அடைய முடியும். பழைய தடைப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மேலும் மன அழுத்தம் தீரும். துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால் அதிக நன்மையை பெறுவீர்கள். கேதுவின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். அபரிமிதமான நிதி நன்மைகளை பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

Source link