தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கலை செய்து வருகின்றனர். மேலும் பரப்புரையை தீவிரமாக தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதனால் அப்பகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் லால்குடி தொகுதியில் இருக்கும் கல்லக்குடி ரயில் நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தீடிரென கீழே இறங்கி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துவிட்டார். இந்த தண்டவாளத்தில்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது தலை வைத்து படுத்து சிறை சென்றிருந்தார். அவரது நினைவாக தானும் தண்டவாளத்தில் படுத்ததாக தெரிவித்துள்ளார். 

Source link