சிவகாசி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்

சிவகாசி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

சிவகாசியில் பிரசாரத்தின் போது இபிஎஸ் பேசியதாவது: காவிரி குண்டாறு திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை கால்வாய் வெட்டி ஏரிகள் குளங்கள் நிரப்பி, வேளாண்மைக்கு தேவையான நீர் கொடுக்கும் திட்டம். திட்டமிட்டு திமுக முடக்கிவைத்துள்ளது. திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.

நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத முதல்வர் ஆள்கிறார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் நாடு சிறப்படையும். திமுகவுக்கு குடும்பம் பற்றி தான் சிந்தனை. ஸ்டாலின் அரசு தொடர வேண்டுமா?

எங்கே பார்த்தாலும் போதைப் பொருள், கஞ்சா விற்கிறது. மாத்திரை, சாக்லேட், திரவம் என பல ரூபத்தில் வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் நம் கண் முன்னே சீரழிகிறார்கள். இதை தடுத்து நிறுத்த அதிமுக ஆட்சி மலர வேண்டும். மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதும் தமிழகத்தில் ஒடுக்கப்படும். அதிமுக ஆட்சியில். எங்கும் கஞ்சா இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுப்போம்.

டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ஓ போட்டுக்கொண்டே ஓய்வுபெற்றுவிட்டார். ஏனெனில் கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. இரண்டு வயது குழந்தையையும் விட்டுவைக்கவில்லை. ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதுதான் இதற்குக் காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.

திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. இப்போது மீண்டும் அறிவிப்பு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே பாக்கி இருக்கிறது, அதை நிறைவேற்றுங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இப்போது மீண்டும் பொய் வாக்குறுதி கொடுக்கிறார்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Source link