ஏஐ கண்ணாடி அணிந்து சட்டமன்றத்துக்கு சென்றேனா? போட்டுடைத்த தவெக அமைச்சர் பர்வேஸ் – tvk minister parvesh explanation meta ai glass in assembly controversy

நேற்றைய தினம் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பர்வேஸ் அணிந்து வந்திருந்த கண்ணாடி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றன. அவர் போட்டு வந்துள்ள கண்ணாடியில் கேமரா உள்ளது. ஏஐ கண்ணாடி . சட்டமன்றத்துக்குள் இதுபோன்று கண்ணாடி அணிந்து வர அனுமதி இல்லை என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அவரே தற்போது விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

அமைச்சர் பர்வேஸ்

அதாவது புதுக்கோட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான முகமது பர்வேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கண்ணாடி விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான்கு நாட்களுக்கு முன்னாடி ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு சென்று நான் பரசோதனை செய்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே பவர் பிரச்சனை உள்ளது சார்.

ஏஐ கண்ணாடி இல்லை

இப்போ தலைவலி என்று மருத்துவமனைக்கு சென்றேன். அங்க டாக்டர் எழுதி கொடுத்த கண்ணாடி. அதை ஏஐ கண்ணாடி. சட்டமன்றத்தில் போட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை. லைவ்ல ஓடிட்டு இருக்கு. அப்பறம் எதுக்கு சார் ஏஐ போட்டுட்டு போகனும் என்றார் பர்வேஸ். அதோடு ஏதாவது பண்ணனும். நம்மளை தொடனும் நினைச்சு பணித்து இருக்காங்க. மக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்வார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார் முகமது பர்வேஸ்.

முன்னதாக நேற்றைய தினம் அமைச்சர் பர்வேஸ் சட்டமன்றத்திற்கு வருகை தந்த போது, கருப்பு கண்ணாடி ஒன்று அணிந்து வந்திருந்தார். இது ஏஐ கேமரா வசதி கொண்ட மெட்டா ஸ்மார்ட் கண்ணாடி என சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் கிளம்பியது. இது சம்பந்தமாக இணையத்தில் பலரும் பதிவுகளை பகிர்ந்த நிலையில், அமைச்சர் கேமரா பொருத்திய கண்ணாடியை அனிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தரா என்ற கேள்விகளும் எழுந்தன.

பொய்யான தகவல்கள்

இதனையடுத்து நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடி மட்டுமே. அதில் கேமரா எதுவும் இல்லை. நான் அணிந்து வரும் கண்ணாடியில் கேமரா இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். இது மாதிரியான வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் பர்வேஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது தன்னுடைய கண்ணாடி தொடர்பாக மீண்டும் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

இதனிடையில் நேற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் முதல்வருக்கு டைம் உள்ளது. அவர் அதிகாரிகளை கேட்டு Prepare செய்து திங்கட்கிழமை பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

பாயிண்டாக பேசிய அமைச்சர் ரமேஷ்…காது குடுத்து கேட்ட சி.எம் விஜய்

திங்கட்கிழமை பதிலளிக்கும் முதல்வர்

இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதில் அளிப்பேன் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். இதனால் மூன்று நாட்கள் சட்டமன்ற விடுமுறைக்கு பின்பாக அவர் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடுமையான விமர்சனத்திற்கு எப்படி பதிலளிக்க போகிறார் என்பதும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link