தவெக கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம்.. நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்: கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பார்களா? – tvk led alliance parties are set to consultation on the september 9th

அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றுள்ளனர். இதனையடுத்து தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ,மற்றும் ஐயூஎம்ல் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பின்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்தன. இதனிடையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளை வைத்து புதிய கூட்டணி அமைப்பதற்கான பணிகளில் இறங்கியது தவெக. இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தவெகவின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Source link