“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!”

காவிரி – குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.

ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.

Source link